விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதாசலம் 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன், 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அருள்மணி செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பணிகள் என்ன என்பதை தெளிவாக கூறினார்கள்.
பள்ளி தலைமையாசிரியர் மீனாம்பிகை மற்றும் கல்வியாளர் அரங்கநாதன் முன்னாள் தலைமையாசிரியர் முன்னிலை வகித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொதுமக்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment