ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம்,ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வட்டாரக் கல்வி அலுவலர் அறிவழகன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பணிகள் என்ன என்பதை தெளிவாக கூறினார்கள்.ஊராட்சி மன்றத்தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியை சிவகாமி அவர்கள் தலைமையேற்று விருப்பம் உள்ள உறுப்பினர்கள் யார் என கேட்டறிந்து தலைவராக இரா.ஆஷா அவர்களையும் துனைத்தலைவராக அஞ்சம்மாள் மற்றும் 18 உறுப்பினர்களை அனைத்து பெற்றோர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்புரைக் கூறினார்.
ஆசிரியர் மாலதி.அபிஷேகராயர்.அருள்மேரி .ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குணசேகரன்.சிலம்பரசன் ஆகியோருடன் 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.ஆசிரியர் அருள்வடிவேலன் நன்றி கூறினார்கள்
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.


No comments:
Post a Comment