மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட குழு பிரகாஷ் தலைமையில் தமிழ்நாட்டில் மத்திய அரசு இந்தி திணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டக் குழு உறுப்பினர் புகழேந்தி பொன்னம்பலம் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் வட்ட குழு தினேஷ் பாபு காளிதாஸ் மணிகண்டன் மற்றும் கிளை செயலாளர் கேபி குமார் இளங்கோவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர்;கே.பாலமுருகன்

No comments:
Post a Comment