கடலூர் மாவட்டம்,புவனகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். காந்திமதி, சுகுமார் ,வைத்தியநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சிவப்பிரகாசம் துவக்க உரையாற்றினார். கோரிக்கையை விளக்கி வட்டச்செயலாளர் சீனு சிகாமணி பேசினார், வீரநாராயணன், அண்ணாதுரை ,முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டம் கேஷ் லெஸ் ஸ்கீம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் அனைத்து ஓய்வுதியருக்கும் அனைத்து விதமான நோய்களுக்கும் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் மேலும் ஸ்டேட் லெவல் எம்பவர்டு கமிட்டி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் மருத்துவ செலவினத்தை திரும்ப கோரும் விண்ணப்பங்கள் மேல் நிலுவையில் உள்ளதை 30 .6 .2022 க்குள் தீர்வு காண வேண்டும்,
மேலும் 70 வயது நிரம்பிய அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும் பத்தாம் ஆண்டில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ,வனக்காவலர் ,எழுத்தர் ஆகிய ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்கிட வேண்டும் தமிழக முதல்வர் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதுடன் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நிறைவுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்றனர் .முடிவில் வட்ட துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்.

No comments:
Post a Comment