புதர்கள் மண்டிக் கிடக்கும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவல நிலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

புதர்கள் மண்டிக் கிடக்கும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவல நிலை

புதர்கள் மண்டிக் கிடக்கும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவல நிலை.


கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடியில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகின்றது குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே வட்டாட்சியர் குடியிருப்பு கட்டப்பட்டு உள்ள நிலையில் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. 


மேலும் புதர்கள் மண்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளது இதனால் விஷப் பாம்புகள் கூடாரமாக மாறியுள்ளது பேரிடர் காலங்களில் வட்டாட்சியர் பயன்படுத்துவதற்காக தமிழக அரசு நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளதால் பொதுமக்களின் பணம் வீணடிக்கபடுவதுடன் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது 


எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்து புதர்கள் மண்டிக் கிடக்கும் வட்டாட்சியர் குடியிருப்பை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தியாளர்; தே. தனுஷ்.

No comments:

Post a Comment

*/