கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சாலையில் ஓரமாக கிடந்த ஹேண்ட்பேக்கை ஓப்படைத்த இளைஞர் செயல் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சாலையில் ஓரமாக கிடந்த ஹேண்ட்பேக்கை ஓப்படைத்த இளைஞர் செயல் !!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி,லிங்க்ரோடு திருவதிகை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 30) த/பெ ஆரோக்கியதாஸ் மற்றும் A. குச்சிப்பாளையம் கீழ்அருங்குணதாதை சேர்ந்த பிரபாகரன் த/பெ நாகராஜன் ஆகிய இருவரும் செம்மண்டலம் அருகே வந்துகொண்டிருந்தபோது கருப்பு நிற ஹேண்ட்பேக் (Handbag) ஒன்று கிடந்தது. 


அதை கண்ட இருவரும் திறந்து பார்த்தபோது அதில் பணம் மற்றும் செல்போன் இருந்ததை கண்டு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திரு. குருமூர்த்தி அவர்கள் அந்த ஹேண்ட்பேக்கை சோதனை செய்து அதில் இருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டார். ஹேண்ட்பேக்கை  தவறிவிட்டது பாப்பாம்மாள் நகர், கோண்டூர் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவிதா (வயது 39) என்பது தெரியவந்தது.


பின்னர்  அவர்களை நேரில் வரவழைத்து கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர்  திரு. குருமூர்த்தி அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. ஹேண்ட்பேக்கில் (Handbag) இருந்த பணம் ரூபாய் 31,500 மற்றும் செல்போன் சரிபார்த்து கவிதா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 


கீழே கிடந்த ஹேண்ட்பேக்கை கொண்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்த சந்தோஷ்குமார் மற்றும் பிரபாகர் ஆகியோரை காவல் ஆய்வாளர் பாராட்டினார்.

No comments:

Post a Comment

*/