கடலூர் மாவட்டத்தின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் அதன் உபதொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்றவற்றைச் சார்ந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றுள் முக்கியமானது விவசாயிகள் எளிதில் வங்கி கடன் பெற வழிவகுக்கும் கிசான் கடன் அட்டை திட்டம் ஆகும். கிசான் கடன் அட்டை திட்டமானது கடந்த 1998ம் வருடம் துவங்கப்பட்டது ஆகும்.
விவசாயிகளின் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் இடுபொருட்கள் வழங்க தேவையான கடன் உதவியை வங்கிகள் மூலம் பெறுவதற்கு இத்திட்டம் பெரிதும் உதவுகிறது. இத்திட்டத்தில் மத்தியஅரசு உதவியுடன் குறைந்த வட்டியில் அதாவது 7 சதவிகிதம் வரையில் கடன் பெறுவது விவசாயிகளுக்கு சாத்தியமாகிறது.மேலும் பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழுவளர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடன் அளிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவில் வங்கிக்கடன் செலுத்திடும் விவசாயிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மத்திய அரசு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்கிறது.இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அடமானம் இல்லாமல் தற்போது ரூ.1,60,000/- இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அடமானத்தின் பேரில் ரூ.3,000,00/- கிசான் கடன் அட்டையில் கடன் பெறலாம்.
மேலும் இவ்வாறு கடன் பெறும் போது ஆய்வுக் கட்டணம், நிர்வாகம் சார்ந்த சேவைகளுக்கான கட்டணம் மற்றும் ஆவண பராமரிப்பு போன்ற இனங்களுக்கான கட்டணத்தை வசூலிக்க விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே இந்த கடன் அட்டையை பெறலாம். இதற்காக எளிமை படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம் அளிக்கப்படுகிறது. ஒரு வேளை எந்த வங்கியிலும் கணக்கு இல்லை என்றாலும் அருகில் உள்ள ஏதாவது ஒரு வங்கி கிளையில் தங்களுடைய நில உரிமை ஆவணங்களை அளித்து புதிய கணக்குது வங்க விவசாயிகள் விண்ணப்பம் அளிக்கலாம்.
உழவர் கடன் அட்டை ஏற்கனவே பெற்றுள்ள விவசாயிகள் தங்களது வங்கி கிளையை அணுகி கடன் தொகையின் உச்ச வரம்பை அதிகரிக்க விண்ணப்பிக்கலாம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியும் மத்திய அரசு பங்களிப்பு 3 சதத்தோடு கூடுதலாக தமிழக அரசு 4 சதம் வட்டித்தள்ளுபடி அளிப்பதால் உரிய காலக்கெடுவிற்குள் கிசான் கடன் அட்டையில் கடன் பெறும் விவசாயிகளுக்கு 0 சதம் வட்டியில் பயிர்க்கடன் சாத்தியமாகிறது.
பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட உழவர் கடன் அட்டையை புதுப்பிக்கவும் வங்கி கிளையை அணுகலாம். கடந்த 24.02.2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் ஊக்க தொகை திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1,82,811 விவசாயிகள் சேர்ந்து உள்ளனர். இதுவரை 1,48,888 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 33,923 விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் வழங்க சிறப்பு முகாம்கள் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நடத்ததப்பட உள்ளன.
மேலும் இந்த முகாம்களில் பயிர்க்காப்பீடு முக்கியத்துவம் பயிர்க்காப்பீடு வழிமுறைகள், பயிர்க்காப்பீடு செய்யும்போது செய்யத்தக்கன எவை,செய்யக்கூடாதவை என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது. இம்முகாம்களில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, பயிர்க்காப்பீடு நிறுவனம், முன்னோடி வங்கிகள், பொது சேவை மையம், கால்நடைப் பராமரித்துத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே, கடலூர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை நல்முறையில் பயன்படுத்திக் கொண்டு, பயிர்க்காப்பீடு குறித்து முழுமையாக விவரம் அறிந்துகொள்ளவும், கிசான்கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் கடன் அட்டைகள் பெற்றுப் பயனடையவும் மாவட்ட ஆட்சியர் அவர்களால்கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது

%20(8).jpeg)
%20(9).jpeg)
No comments:
Post a Comment