கடலூர் பெரியார் கலைக் கல்லூரி சார்பில் "உயிர்-உரங்கள் உற்பத்தி தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி சார்பில் "உயிர்-உரங்கள் உற்பத்தி தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம்

 

"உயிர்-உரங்கள் உற்பத்தி தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் பெரியார் கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பாக நடைபெற்றது. 


கடலூர் மாவட்டம்,பெரியார் கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பாக "உயிர்-உரங்கள் உற்பத்தி தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முனைவர் ம.ஆனந்தராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமை உரையில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் அவர்கள் உயிர்-உரங்களின் பயன்பாடுகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.


சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை துறையை சார்ந்த நுண்ணுயிர் துறை பேராசிரியர் முனைவர் தினகர் அவர்கள் சிறப்புரையாற்றினார் இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதனுடைய ஒருங்கிணைப்பாளர் களாக , முனைவர்கள் மணிகண்டன், தேன்மொழி, தமிழ்ச்செல்வி ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக முனைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/