கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் - கோடை காலத்தை காரணம் காட்டி ஏசியும், சுற்றுலாவும் கேட்ட கவுன்சிலர்கள் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் - கோடை காலத்தை காரணம் காட்டி ஏசியும், சுற்றுலாவும் கேட்ட கவுன்சிலர்கள் !!!


மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டிய மாதாந்திர ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கோடை காலத்தை காரணம் காட்டி ஏசியும், சுற்றுலாவும் கேட்ட கவுன்சிலர்களால் சிரிப்பலை ஏற்பட்டது 


கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் மன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட மின்வெட்டு,குடிநீர்,அடிப்படை வசதிகள்,பள்ளிகள் மேம்பாடு குறித்த கேள்விகளுக்கு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் பதில்களையும் அளித்தனர்.ஊராட்சியில் தரமற்ற சாலை அமைத்து பணிகள் நடக்கும் போது கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துவது இல்லை என்றனர். கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பேசியதால்  அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அவர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பா.ம.க. கவுன்சிலர் ஜெயராமன் கோடை காலத்தை காரணம் காட்டி அரங்கிற்கு குளிர்சாதன வசதியும்,மேலும் சுற்றுலாவும் அழைத்துச்செல்ல வேண்டும் என்றதால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.கூட்டம் முடியும் போது துணை தலைவர் ஐயனார் பேசுகையில் உறுப்பினர்கள் கேள்விக்கேட்டால் பதில் கூறுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தலைவர் உள்ளார் தேவையில்லாத நபர்கள் பதலளிக்க வேண்டாமென்று பேசினார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கவுன்சிலர் கார்த்திகேயன் பேசினார் இருவருக்கும் கலாச்சாரமான விவாதம் நடந்தது பின்னர் தலைவர் தெய்வ. பக்கிரி தலையிட்டு சமாதனப்படுத்தினார்.

No comments:

Post a Comment

*/