கடலூர் மாவட்டத்தில்,தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும்,தமிழகத்தில் ஒரே மாதிரியான மாத ஊதியம் பெறும் வகையில் ஊதியத்தை நிர்ணயித்து பணியாளர்களின் 30 ஆண்டுகால பணிகாலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம்,ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கிட வேண்டும்,ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் நிலையிலான பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட சுகாதாரப்பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

No comments:
Post a Comment