கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன். விவசாயி. இவர், நிலத்தை பட்டா மாற்றம் செய்ய கிராம உதவியாளர் ஆனந்தனிடம் கேட்டார். அவர், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலக சர்வேயர் தங்கராஜை அறிமுகம் செய்து வைத்ததுடன், பட்டா மாற்றம் செய்ய ரூ. 6,000 தர வேண்டும் என, கூறியுள்ளார்.இது குறித்து விவசாயி நீலகண்டன், கடலுார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து சர்வேயரிடம் தருமாறு கூறி அனுப்பினர். நேற்று குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் இருந்த சர்வேயர் தங்கராசு, கிராம உதவியாளர் ஆனந்தன் ஆகியோரிடம் விவசாயி நீலகண்டன் ரசாயனம் தடவிய ரூ. 6,000 கொடுத்தார்.அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், சர்வேயர் தங்கராசு, கிராம உதவியாளர் ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

No comments:
Post a Comment