கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதனையடுத்து விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தொகுப்பு வீடு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் கட்டித்தரப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவர்களது மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மனைவி கோமதி மகள் சந்தியா இருவரும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இன்று வழக்கம் போல் மகள் சந்தியா பள்ளிக்கு சென்றுவிட்டார் கோமதி உணவு சமைத்து வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வீட்டின் மேற்கூரை முழுவதும் கீழே விழுந்ததில் வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேதமடைந்ததுடன், தாய் கோமதி மகள் சந்தியா இருவரும் வீட்டை பூட்டி வெளியே வந்த சற்று நேரத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வருவாய் வட்டாட்சியர் அவர்களுக்கு தகவல் அளித்தனர்,தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் வட்டாட்சியர் தனபதி,பார்வையிட்டு விரைவில் புதிய வீடு கட்டுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இதே போல் அக்கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இதே நிலையில் உள்ளதால் அதனையும் சரி செய்து தரப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment