கடலூர் மாவட்டம்,புவனகிரி அருகே உள்ள வடக்கு திட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.முகாமை வடக்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் வேலாயுதம் ,திமுக கிளை கழக செயலாளர் சாரங்கபாணி ,ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியம் திமுக பிரதிநிதி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை மருத்துவர் ரவி தலைமையிலான கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சக்கரபாணி, பார்வதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர் .
சுமார் 150க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது .மேலும் இந்த முகாமில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்.

No comments:
Post a Comment