கடலூரில் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர் போராட்டம்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 April 2022

கடலூரில் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர் போராட்டம்!!


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கிக் வருகிறது.


இந்த கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது இரண்டாம் ஆண்டு  மூன்றாம் ஆண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், மற்ற அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தனர்.


இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்தார். 


மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யவும் அவர் உத்தரவிட்டார். ஆனால் இதை ஏற்க மாணவர்கள் மறுத்து விட்டனர். தொடர்ந்து 16ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினார்கள்.


இந்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக தாங்கள் அணிந்திருக்கும் வெள்ளை நிற கோட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 


No comments:

Post a Comment

*/