கடலூர் மாவட்டம் புவனகிரியில் வெள்ளாற்றின் முகப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு,தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு,மாநில உரிமை மீட்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் பேராசிரியர் பூ.சி இளங்கோவன் தலைமை வகித்தார் கழக கோ. நெடுமாறன் முன்னாள் மாவட்ட திராவிடர் கழக சி. தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மகளிர் பாசரை செயலாளர் வரவேற்புரை ஆற்றினார் திராவிடர் கழகத் தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி புவனை யாழ் திலீபன் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் மோகன்தாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் புவனகிரி திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளரும்புவனகிரி பேரூராட்சி மன்றத் தலைவருமான த .கந்தன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முல்லை மாறன் லலிதா சிபிஎம் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் கீரை கோ .வீரமணி திமுக துரைமணிராஜன்மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் யாழ் செங்குட்டுவன் மேலும் திராவிடர் கழக இயக்க நிர்வாகிகள் மகளிர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சுரேஷ் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நகர தலைவர் பாண்டியன் நகர செயலாளர் முருகன் ஒன்றிய செயலாளர் ராமநாதன் திராவிடர் கழக செயலாளர் ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டு முடிவில் ஏபி .ராமதாஸ் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:
Post a Comment