ஐவதகுடி சமத்துவபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் - கூடுதல் ஆட்சியர் பங்கேற்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 April 2022

ஐவதகுடி சமத்துவபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் - கூடுதல் ஆட்சியர் பங்கேற்பு


கடலூர் மாவட்டம்,வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பானவர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


ஐவதகுடி ஊராட்சியில் கடந்த ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த 29-8-1999ல் தொடங்கபட்டது.

தற்போது அங்குள்ள சில வீடுகள் இடிந்த நிலையிலும், சில வீடுகள் ஒதுக்கபட்டவர்கள் குடியேறாத நிலையிலும் உள்ளது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின் பேரில் பழுதுநீக்கம் செய்யும் பணி தொடங்க உள்ளது.


ஐவதகுடி சமத்துவபுரத்திற்கு பழுது நீக்கம், மற்றும் சாலை அமைக்க 2-16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலியாக உள்ள மூன்று வீடுகளுக்கு குடியிருக்க பயணாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பம் பெறவும் ,பழுது நீக்க பணி செய்யவும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பானவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் வேப்பூர் வட்டாட்சியர் மோகன், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், சிவகுருநாதன், ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி முனியன் மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/