புவனகிரியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்க்கான பெற்றோர்கள் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

புவனகிரியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்க்கான பெற்றோர்கள் கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்க்கான பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது!!!


கடலூர் மாவட்டம்,புவனகிரி வட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பதற்கான பெற்றோர்கள் கூட்டம் பள்ளியின் தலைமையாசிரியர் தேன்மொழி அவர்கள் தலைமையில் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நிகழ்ச்சி நடைப்பெற்றது.


நிகழ்ச்சியில்  தமிழ் ஆசிரியர் லதா  சுஜாதா   ரகுபதி    ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக பள்ளியின் மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்புக்கான  பெற்றோர் கழகத் தலைவர் மனோகரன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் முருகன் ரகுபதி  புவனேஸ்வரி சுஜாதா தீபா அருள் ஜோதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாத உதவித்தொகை தமிழக அரசின் முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் பெற்றோர்கள் மறு கட்டமைப்பிற்கான குழு பதிவு செய்தல் உறுப்பினர்கள் தெரிவு செய்தல் எஸ்எம்எஸ் தலைவர் தெரிவு செய்தல் சான்று வழங்குதல் போன்ற பல்வேறு விளக்கங்களை    பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் விளக்க உரை எடுத்துரைத்து தேசிய கீதத்துடன் பள்ளி ஆசிரியர்கள் நன்றி உரை ஆற்றினார் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்புக்கான   பெற்றோர்கள் கூட்டத்தில் ஏராளமான பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்; வீ.சக்திவேல்

No comments:

Post a Comment

*/