விருத்தாசலத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

விருத்தாசலத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

 

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு.


கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமாக வசித்து வருகின்றனர். 


இந்த நிலையில் அரசால் வழங்கப்பட்ட இலவச மனைக்கு இன்று தேதிவரை பட்டா வழங்கப்படவில்லை என்றும், இதனால் மின் இணைப்பு பெறமுடியாமல் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் வழங்கக்கூடிய இலவச வீட்டு திட்டத்தையும், எங்களால் பெற முடியாமல் தவித்து வருவதாகவும்,  அரசால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு காலதாமதம் ஏற்படாவண்ணம் பட்டா வழங்க வேண்டி சேப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை தீனதயாளன், முன்னாள் தலைவர் கோவிந்தசாமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் சார்பில் 85 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு  விருத்தாசலம் தனி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:

Post a Comment

*/