கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பூதவராயன் பேட்டை ஊராட்சியில் ஆர்விபி அறக்கட்டளை மற்றும் ஆர்விபி மருத்துவமனை சார்பாக மருத்துவர் கதிரவன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் பூதவராயன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பழனிச்சாமி துவக்கி வைத்தார் மருத்துவர் காயத்ரி மதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த இலவச மருத்துவ முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
கிராம சுகாதார செவிலியர் பிரபாவதி மருத்துவமனை ஊழியர்கள் வடிவழகி நர்மதா மின்ஹஜ் சங்கவி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவம் அளித்தனர் மேலும் பூதவராயன்பேட்டை அங்கன்வாடி பணியாளர் சிவசெல்வி மற்றும் கிராம சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனடு பயனடைந்தனர்.
இம்மருத்துவ முகாமில் மருத்துவர் கதிரவன் அவர்கள் தொடர்ந்து பல்வேறு கிராம பொது மக்களுக்கு கொரோனா காலகட்டத்திலிருந்து சுற்றுவட்டார பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வகையான இலவச மருத்துவம் செய்து வருவதால் மருத்துவர் கதிரவன் அவர்களுக்கு சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்.

No comments:
Post a Comment