சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் - தீடீர் மயங்கி விழுந்த மாணவி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 April 2022

சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் - தீடீர் மயங்கி விழுந்த மாணவி


கடலூர் மாவட்டம் ,சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோல அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 12 நாட்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நடத்திக் கொண்டிருந்தனர்.


அதில் ஒரு பகுதியாக உண்ணாவிரத போராட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தின் போது மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார், இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த சக மாணவர்கள் மாணவியை மீட்டு தண்ணீர் கொடுத்து உதவினார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கடந்த 12 நாள்களாக பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். கல்லூரி வளாகத்தில் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் அமா்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினார்கள். மாணவர்கள்  கோரிக்கைக்கு அரசு எந்தவித நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை நடவடிக்கை எடுக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.


செய்தியாளர்; மா. பாலாஜி.

No comments:

Post a Comment

*/