வேப்பூர் கூட்டுரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 April 2022

வேப்பூர் கூட்டுரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..


கடலூர் மாவட்டம்,வேப்பூர் கூட்டுரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது, மத்திய அரசு பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவது, இந்தி திணிப்பு, பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு கட்டாயம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி என அனைத்தையும் கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக இன்று வேப்பூர் கூட்டு ரோட்டில் 22 /04/2022 காலை 11:30 மணிக்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் சாமிதுரை, பொன் சோமு, வேல்முருகன், கருப்பையா, இளையராஜா, ரத்தினசாமி, முத்துசாமி, மணிவாசகம், செல்வி வட்ட செயலாளர் தோழர் சிவஞானம் தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் GR.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார்.கூட்டுறவு சங்க மாநில தலைவர் நகர் பெரியசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள் ராஜ்குமார்,பெரியசாமி , அஜித், சந்திரன், மாணவர் சங்க பிரதிநிதிகள் மதிவாணன்,சதிஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

*/