கடலூர் அருகே தீ விபத்து- ஒரு பகுதி சேர்ந்த இருவர் கடைகள் எரிந்து சாம்பல் !! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

கடலூர் அருகே தீ விபத்து- ஒரு பகுதி சேர்ந்த இருவர் கடைகள் எரிந்து சாம்பல் !!

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட வாழப்பட்டு கம்பர் நகரில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்ததாக தெறிகிறது. நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.


இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரது பங்க் கடை திடீர் என தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரே பகுதியில் வருபவரது பங்க் கடையும் ஏற்படுத்தியது.தீப்பற்றியதற்கான காரணத்தை நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/