கடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புளியந்தோப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பத்தை அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புளியந்தோப்பில் முத்துமாரியம்மன் கோயில் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோயில் புதன்கிழமை காலை சுமார் 8 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தவர்கள் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சிறப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கோயில் முழுமையாக எரிந்து சாம்பலானது. நடுவீரப்பட்டு போலீஸார் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment