வடலூர் பேருந்து நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

வடலூர் பேருந்து நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி !!!


வடலூர் பேருந்து நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம்,வடலூர் பேருந்து நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி  கடலூர் மாவட்ட ஆட்சியர்  பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார்  துணைத்தலைவர் சுப்புராயலு வடலூர் நகராட்சி ஆணையர் குணாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


வடலூர் நகர மன்ற உறுப்பினர்கள் துப்புரவு பணியாளர்கள் ஒன்றிணைந்து வடலூர் பேருந்து நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது வடலூர் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி வடலூர் நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற பேரணியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.

செய்தியாளர்; தே. தனுஷ்.

No comments:

Post a Comment

*/