கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் வானமாதேவி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக அம்பேத்கர் அவர்களின் 131 ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒருங்கிணைத்த விழாவினை கிராம நாட்டாமைகள் இளங்கோவன்கோவிந்தரசு ஆகியோர் முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளர் வானமாதேவி ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புக்கு பேனா பென்சில் வழங்கினார்.
விடுதலை சிறுத்தை கட்சியி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பித்தார். இதில் பூபாலன் நேரு துரை சிலம்பரசன் பரமசிவம் வெங்கடேசன் சம்பத் விஜயகுமார் மணிகண்டன் பிரசாந்த் அருண் கார்த்திக் மகேஷ் சிந்தனைச்செல்வன் மற்றும் ஊராட்சி உறுப்பினர் இளையராஜா பிச்சை பிள்ளை உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
செய்தியாளர்; கே.பாலமுருகன் காட்டுமன்னார்கோயில்.

No comments:
Post a Comment