காட்டுமன்னார்கோயிலில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

காட்டுமன்னார்கோயிலில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காட்டுமன்னார்கோயிலில்  திமுக சார்பில் பெருந்தலைவர் எம் ஆர் கே நினைவு  தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் கச்சேரி வீதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர்  நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் உத்தரவுப்படி காட்டுமன்னார்கோயில் எம் ஆர் கே கல்லூரி முதல்வர் எம் ஆர் கே பி கதிரவன் ஆணைக்கிணங்க பெருந்தலைவர் எம்ஆர்கே நினைவு  தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு திமுக நகர செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார் திமுக மாவட்ட பிரதிநிதி பூக்கடை செந்தில் அனைவரையும் வரவேற்றார் திமுக ஒன்றிய செயலாளர் எம்ஏ  முத்துசாமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து அனைவருக்கும் நீர்மோர் வழங்கினார் நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் கருணாநிதி துணைத் தலைவர் மகேஸ்வரி நெடுமாறன் பேரூராட்சி உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக குமராட்சி  மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றம் மாவட்ட ஒன்றிய நகர இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/