பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நாத்து நடும் போராட்டம் ஒத்திவைப்பு ..! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நாத்து நடும் போராட்டம் ஒத்திவைப்பு ..!

கடலூர் மாவட்டம் , பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக 30.4. 2022 அன்று காலை 10 மணி அளவில் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மாபெரும் நாற்று நடும் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் பண்ருட்டி வட்டாட்சியர் சிவகார்த்திகேயன் தலமையில் பண்ருடிட்டி வட்டாட்சியர் அலுவளகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் பணியை 75% முடித்து தருகிறோம். என்று தாசில்தார் முன்னிலையில் தேசிய நெடுஞ்சால துறை நாகாய் நிறுவன பொறியாளர் ஜோசப் அந்தோனி அவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கையொப்பமிட்டு உறுதி அளித்தனர்.

அதன் காரணமாக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன் அவர்களின் ஆலோசனைப்படி போராட்டம் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது.


அமைதி பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் சுரேந்தர், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் தேவராசு, நகர செயலாளர்கள் செந்தில், மணி, ஒன்றிய தலைவர் சிவா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யனார், சிறுகிராமம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/