கடலூர் குளோபல் சிறப்பு பள்ளி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி சார்பில் உலக ஆடிசம் தினம் குறித்த கருத்து பட்டறை!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

கடலூர் குளோபல் சிறப்பு பள்ளி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி சார்பில் உலக ஆடிசம் தினம் குறித்த கருத்து பட்டறை!!

கடலூர் குளோபல் சிறப்பு பள்ளி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி சார்பில் உலக ஆடிசம் தினம் குறித்த கருத்து பட்டறை!!


கடலூர் திருப்பாப்புலியூர் குளோபல் சிறப்பு பள்ளி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி சார்பில் உலக ஆட்டிசம் தினம் குறித்த கருத்து பட்டறை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3ம் தேதி சர்வதேச ஆட்டிசம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் புற உலகு சிந்தனை அற்றோர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.  


இதனையொட்டி கடலூரில் குளோபல் சிறப்பு பள்ளி மற்றும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி இணைந்து ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர்களுக்கான சவால்கள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்து பட்டறை   நடைபெற்றது.  இக்கருத்துப்பட்டறைக்கு குழந்தைகள் பிரிவு துறையின் தலைவர் பேராசிரியர். மருத்துவர். சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். 


கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை சேர்ந்த முடநீக்கு வல்லுநர் சுந்தர வடிவேலு  கருத்துப்பட்டறையின் நோக்கம் குறித்து பேசினார். கடலூர் மாவட்ட தலைமை மருத்துவ மனை மனநல திட்டத்தின் மேலாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மற்றும்  பெற்றோர்களின் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் ஆட்டிசம் நோய் குறித்த பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் முறைகள் குறித்த கலந்து றையாடலை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியின் குழந்தைகள் பிரிவு துறையின் மருத்துவர்கள் இளமாரன்,  கார்த்திகேயன், . வி.பி. கார்த்திகேயன் மற்றும் மனநல பிரிவை சேர்ந்த மருத்துவ மனநல ஆலோசகர் மோனிகா ஆகியோர் நடத்தினர். 


இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் குளோபல் நிறுவனத்தின் தலைவர் குமுதம் வரவேற்றார். மேலாண்மை இயக்குனர் கோபால் நன்றி கூறினார். இக்கருத்துப்பட்டறையில் 50 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/