கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் சாலையில் செம்மண்டலம் பகுதியில் சாலையோரம் உள்ள தென்னைமரம் மின் கம்பத்தின் மீது விழுந்ததில் மின் ஒயர்கள் முற்றிலும் அறுந்து விழுந்தது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக நெல்லிக்குப்பம் பகுதியில் இருந்து கடலூர் பேருந்து நிலையம் நோக்கி சென்ற கார் மீது மரம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற ஓட்டுநர் கொளஞ்சியப்பன் மற்றும் கார் உரிமையாளர் சந்திரசேகர் அவரது மனைவி பார்வதி உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து மரம் விழுந்ததில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, உதவி ஆய்வாளர் கதிரவன் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தில்லைகோவிந்தன் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து சாலையில் விழுந்துக் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


No comments:
Post a Comment