விருத்தாச்சலத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

விருத்தாச்சலத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா

சாத்தியம் கிராமத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை வில்வனேஸ்வரர் ஆலயத்தில் புவி தின விழாவை முன்னிட்டு மரம் நடுதல் நிகழ்ச்சி.

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை வில்வனேஸ்வரர் ஆலயத்தில் புவி தின விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மாவட்ட இணைச்செயலாளர் பிரச்சார தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் விருத்தாசலம் வட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் வேப்பூர் வட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலையில் ஆலயத்தை சுத்தம் செய்து ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஆலய வளாகத்தில் நடப்பட்டது.


இதில் புதுக்கூரைப்பேட்டை முருகன் உட்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:

Post a Comment

*/