புவனகிரி அரசு மேம்படுத்தப்பட்ட தாலுக்கா மருத்துவமனையின் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை!!!!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் இயங்கி வரும் தாலுக்கா மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி தமிழ் நாடு முதலமைச்சருக்கு ஆதிதிராவிட நல கண்காணிப்பு குழு உறுப்பினர் இரா.ரகு வசந்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை மனுவில் புவனகிரி தாலுகாவிற்கு உட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் 1.லட்சத்திற்கும் மேலான மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்திட பெரும் பங்காற்றி வரும் புவனகிரி அரசு தாலுக்கா மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத அவல நிலை காணப்படுகிறது.
![]() |
| மருத்துவமனை |
இதனால் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் அலைக்கழிக்கப்படும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது ஆகையால் இந்த மருத்துவமனையை சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அதே போல் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இரவு நேரங்களில் சுற்றுவட்டார பொதுமக்கள் நலன் கருதி மருத்துவரை நியமனம் செய்திட வேண்டும் தமிழக முதல்வர் தாங்கள் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதி முக்கியத்துவம் அளித்து பல புதிய திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வருகிறீர்கள் எனவே காலம் தாழ்த்தாமல் மருத்துவ கட்டமைப்பு கோரிக்கையை நிறைவேற்றி புவனகிரி பகுதி மக்களின் மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்


No comments:
Post a Comment