கல்லூரி கட்டிட நூலக அறையில் தமிழ்தாய் வாழ்த்துகளுடன் தொடங்கிய உலகப் புத்தக நாள் மற்றும் பதிப்புரிமை நாள் விழாவிற்கு ஆங்கில விரிவுரையாளர் ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கி பேசியபோது, மாணவர்கள் அவர்களின் ஒவ்வொரு நாள் நிகழ்விலும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், ரெட்டைமலை சீனிவாசன், சேகுவாரா, அம்பேத்கர், பெரியார், அறிஞர் அண்ணா, ஏபிஜே அப்துல் கலாம், போன்ற முக்கிய தலைவர்களின் பாட புத்தகங்களை படித்து அறிவுக்கூர்மையை வளர்த்துக்கொள்ள காலத்தை வீணடிக்காமல், புத்தகம் படிப்பது குறித்து மிக விமர்சையாக சிறப்புரையாற்றினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற உலக புத்தக நாள் மற்றும் பதிப்புரிமை நாளில் புத்தகம் வாசிப்பதே மாணவர்களின் சுவாச மூச்சு என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டு நூலக அறையில் முதலாமாண்டு அனைத்து மாணவ மாணவிகள் அனைவரின் கைகளிலும் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த மூத்த தலைவர்கள் இயற்றிய நூல்கள், அறிவியல் சிந்தனைகள், தமிழ் அறிஞர்கள், கவிதை இதழ்கள், போன்ற நூல்களின் ஆசிரியர் வாழ்க்கை வரலாறுகள் என அங்குள்ள பல நூல்களை கொடுத்து படிக்கவைத்து உலக புத்தக தினத்தை போற்றி வணங்கி மகிழ்ந்தனர்.
செய்தியாளர்; செ. பாலமுருகன்.



No comments:
Post a Comment