கடலூர் கால்நடை பராமரிப்புத் துறையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திடிர் ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

கடலூர் கால்நடை பராமரிப்புத் துறையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திடிர் ஆய்வு

கடலூர் கால்நடை பராமரிப்புத் துறையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திடிர் ஆய்வு செய்தார்.


கடலூர் புதுப்பாளையம் கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி. பாலசுப்பிரமணியம் அவர்கள்   ஆய்வுகள் மேற்கொண்டார். 


கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள உறைவிந்து கிடங்கு. உதவி இயக்குனர் நோய்ப் புலனாய்வு பிரிவு அலுவலகம், மண்டல இணை இயக்குநர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம் ,துணை இயக்குனர் அலுவலகம் ,கால் நடை பெரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கால்நடை குறித்தும் ,கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பணியையும் ,சினைப் பரிசோதனை செய்யும் முறை பற்றியும் ,மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக ஆய்வு செய்தார். 


இதன்பிறகு அல்ட்ரா சவுண்டு கருவியின் மூலம் பரிசோதனை செய்யும் முறைப்பற்றி ஆய்வு மேற்கொண்டார் .மேலும் நோய் புலனாய்வு பிரிவில் கோமாரி நோய் தடுப்பூசி பாதுகாக்கும் அறை மற்றும் தடுப்பூசி மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்,


இந்த ஆய்வின்போது கடலூர் மண்டல இணை இயக்குனர் டாக்டர் கு. குபேந்திரன், துணை இயக்குனர் டாக்டர். பொன்னம்பலம், உதவி இயக்குனர்கள் டாக்டர் ஆர். மோகன்,டாக்டர். மகேஸ்வரி, டாக்டர். கஸ்தூரி ,டாக்டர். ராஜேஷ்குமார் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர். ஸ்டாலின் வேதமாணிக்கம், டாக்டர். சுந்தரம், டாக்டர். கமலகண்ணன், டாக்டர் திவ்யா டாக்டர் நரேந்திரன் மற்றும் கால்நடை மேற்பார்வையாளர் முருகன், அமைச்சுப் பணியாளர்கள், கால்நடை ஆய்வாளர் கால்நடை உதவியாளர், ஆய்வக உடனாள், ஆய்வக உதவியாளர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/