காட்டுமன்னார்கோயில் ஆதார் இ சேவை மையம் முடக்கம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

காட்டுமன்னார்கோயில் ஆதார் இ சேவை மையம் முடக்கம்!!!


காட்டுமன்னார்கோயில் ஆதார் இ சேவை மையம் முடக்கம்!!!

 

கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையம் அலுவலகத்தில் ஆதார் மையம் இயங்கி வருகிறது இதில் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் 500 க்கும் மேற்பட்டவர்கள் வந்து ஆதார் எடுத்தல் பிழை முகவரி திருத்தம் செல் நம்பர் இணைப்பது புதியதாக ஆதார் எடுப்பது போன்ற வேலைகள் நடந்து வந்தது திடீரென ஆதார் சேவை மையம் ஐடி லாக் செய்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது.


வழக்கம்போல் வரும் பொதுமக்கள் இன்று காலை ஆதார் அலுவலகத்திற்கு வரும் பொழுது பூட்டி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஆதார் அலுவலகம் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது என போர்டு வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து திரும்பி சென்றனர்.


இதனால் சிறிது நேரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது மேலும் உடனடியாக ஆதார் சேவையை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்; கே. பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/