வேப்பூர் அருகே பிஞ்சானூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

வேப்பூர் அருகே பிஞ்சானூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


வேப்பூர் வட்டம்  பிஞ்சானூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பிஞ்சனூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தை காரணம் ஏதுமின்றி அரசு அங்கு இயங்கி வந்த கொள்முதல் நிலையத்தை திடீரென நிறுத்தி  இங்கு செயல்பட்டுவந்த நெல்கொள்முதல் நிலையத்தை இலங்கியனூர் ஊரில் தற்சமயம் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே நெல்லின் கொள்முதல் விலை ரூபாய் ஆயிரம் இருப்பதாலும் உரம் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் வலசை கிராம மக்கள் பிஞ்சானூரில்  கொள்முதல் நிலையம் செயல்பட்டால் எங்களுக்கு போக்குவரத்து வசதி மிக ஆக இருக்கும் என கூறுகின்றனர். இங்கு சுற்று வட்டாரத்தில் சுமார் 250 ஏக்கர் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது ஆதலால் மீண்டும் பிஞ்சானூரிலே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமெனவும் இதை அரசு கவனம் எடுத்து விரைவில் ஏற்படுத்தித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/