புவனகிரி சி. ஆலம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

புவனகிரி சி. ஆலம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சி. ஆலம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது !!!


கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி. ஆலம்பாடி கிராம ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தைக் கொண்டாடும் விதமாக சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றதலைவர்  என். காமராஜ் தலைமையில் நடைபெற்றது.


சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகவேல் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் ஆர் .அருள்ஜோதி வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக பற்றாளர் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய விஜயலஷ்மி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பொதுமக்களின் ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றி திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்  மகளிர் சுய சார்பு குழு உறுப்பினர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:

Post a Comment

*/