பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது!!


கடலூர் மாவட்டம்,புவனகிரி வட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராம ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இச் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் தலைமை தாங்கினார் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார்.


சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம்     கிராம விரிவாக்க அலுவலர் சமூகநலம் ஆ.புஷ்பவள்ளி    மேல் புவனகிரி வேளாண்மை உதவி பொறியாளர் ரமேஷ்  ஆகியோர்கள் கலந்துகொண்டு  கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் அடைவது குறித்து கீழ்காணும் விவாத பொருட்கள் ஒப்புதல் பெறுதல் வறுமையில்லா ஊராட்சி என்பது யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சறுக்கிவிடாத  அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும். 


அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சி ஆக அமைத்தல் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியை அமைத்தல் அனைத்துக் குழந்தைகளும் வாழ்வும் வளமும் பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் அவர்களின் முழு திறமைகள் வெளிவரும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பது உறுதி செய்தல்  அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தக் கூடிய நிலையில் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலை முறையான நீர் மேலாண்மை மற்றும்  தொடர்ந்து பாதுகாத்தல், பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு புரியும்படியாக  எடுத்துரைத்தனர்.


மேலும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகளிர் சுய சார்பு குழுவினர்கள் வறுமை ஒழிப்பு சங்கத்தினர் மூத்த குடிமக்கள்  ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் முடிவில்        பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் கழக  தலைவர் மனோகரன் நன்றியுரை ஆற்றினார்.


செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:

Post a Comment

*/