கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் ஆதிவராக நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் இரா.ராதிகா அவர்கள் தலைமை ஏற்று விருப்பமுள்ள உறுப்பினர்கள் அனைத்து பெற்றோர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 15-வது வார்டு கவுன்சிலர் செல்லபாண்டியன் 17வது வார்டு கவுன்சிலர் லதா ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் சமூக ஆர்வலர் குமார் சமூக ஆர்வலர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மேல் புவனகிரி வட்டார கல்வி அலுவலர் திருமதி லட்சுமி அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட புதிய 20 பேர் கொண்ட உறுப்பினர்களைகௌரவித்து அவர்களின் பணிகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்இறுதியாக ஆசிரியர் மணிமொழி அவர்கள் நன்றி உரையாற்றினார் கல்வி மேலாண்மைக்குழு நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வீ. சக்திவேல்

No comments:
Post a Comment