திட்டக்குடி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

திட்டக்குடி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினா்.


திட்டக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்தது. இதையடுத்து தொளாா் கிராமத்தில் மின் விநியோகம் தடைபட்ட நிலையில், கிராம மக்கள் தங்களது வீட்டுக்கு வெளியே தூங்கினா். திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் கண்ணகி என்பவரது வீட்டுக்குள் மா்ம நபா்கள் 3 போ் நுழைந்தனா். இதைப் பாா்த்த கிராம மக்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றனா். ஆனால், இருவா் தப்பியோடிய நிலையில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா். அவரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினா்.


தகவலின்பேரில் விரைந்து வந்த ஆவினங்குடி போலீஸாா் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தியதில் ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் எனத் தெரியவந்தது. அவருக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மணிகண்டனை கைதுசெய்த போலீஸாா், தப்பியோடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.


No comments:

Post a Comment

*/