பொதுமக்களின் மக்களின் வரவேற்பை பெற்றுவரும் குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

பொதுமக்களின் மக்களின் வரவேற்பை பெற்றுவரும் குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்


பொதுமக்களின் மக்களின் வரவேற்பை பெற்றுவரும் குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லூர் ஊராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் தினம்தோறும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் மருத்துவமனை வளாகம் தூய்மையாக ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


மேலும் சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு படுகிறது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் அதனைத் தொடர்ந்து அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.


அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண் ஓருவர் கூறுகையில் குறிஞ்சிப்பாடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் நிலையில் குண்டியமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

 செய்தியாளர்; தே. தனுஷ்

No comments:

Post a Comment

*/