கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் டேனிடா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் உள்ளது இந்தத் துணை சுகாதார நிலையம் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இங்கு செவிலியர் தங்கி தினந்தோறும் மருதூர் பு.கொளக்குடி பாதிரிமேடு ஜெயங்கொண்டான் எலைக்குடி ஆகிய ஐந்து கிராமப்புற கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்ப்பது வாராந்திர ஆய்வு கூட்டம் நடத்துவது மற்றும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேற்கொண்டு வந்தனர் தற்போது இந்த சுகாதார நிலையம் மேற்கூரைகள் இடியும் நிலையில் கட்டடங்கள் முழுவதும் சிதலமடைந்து முட்புதர்கள் நிறைந்து பயன்படுத்துவதற்கு பயனற்ற நிலையில் கிடப்பதால் செவிலியர்கள் வந்து தங்கி சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது சவாலாகவே உள்ளது.
இதனால் இந்த நிலையம் செயல்படாமல் உள்ளது சிதிலமடைந்த கட்டிடத்தை இடித்து புதிதாக மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக அமைத்து தர வேண்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment