திட்டக்குடி பெண்ணாடம் பேரூராட்சியில் தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்கம் துவக்க விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

திட்டக்குடி பெண்ணாடம் பேரூராட்சியில் தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்கம் துவக்க விழா

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் 24/04/2022 நேற்று தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்கம் துவக்க விழா நடைபெற்றது.


முதல் நிகழ்வாக மேற்கு வாள் பட்டரையிலிருந்து மின் அமைப்பாளர்களை கொண்ட பேரணி புறப்பட்டு முக்கிய வீதி களின் வழியே கிழக்கு வாள்பட்டறை எஸ் எஸ் கே.பி. என். திருமண மண்டபத்தை வந்தடைந்தது.


சங்க கொடியினை மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தன் ஏற்றிவைத்தார். பெண்ணாடம் கிளை சங்க துவக்க விழா கிளைத் தலைவர் இளையபெருமாள் தலைமையில் துவங்கியது விழாவினை மாநில சங்க நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வணிகர் சங்கத் தலைவர்கள், மின்பொருள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். 


இதில் தொழிலாளர்கள் உரிமைகள் மீட்பு வாரிய கார்டு அமைத்தல் ,இதன் வழியாக நலன் வசதி திட்டங்கள் பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது பெண்ணாடத்தை மையப்படுத்தி 150 புதிய மின் பணியாளர்கள் இதில் உறுப்பினராக கலந்து கொண்டனர். ஏற்கனவே உள்ள பழைய உறுப்பினர்களும் மற்றும் விருதாசலம் முருகன் குடி திட்டக்குடி,மங்கலம்பேட்டை, சேத்தியாதோப்பு திருமுட்டம்,கருவேப்பிலங்குறிச்சி சிதம்பரம், கிளை மின் அமைப்புசங்கங்களும் இதில் கலந்து கொண்டன. 


இதில் முருகன்குடி முருகன் தோழர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார் வேல்முருகன் தோழரும் மணிமாறன் தோழரும் எம் ஜி ராமச்சந்திரன் பெரியார் செல்வன் தோழர் பிரகாசுதோழர் காமராசு அவர்ளும் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/