கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சக்திகணேசன் அறிவுரையின் பேரில் கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பயிற்சி காவலர்கள் மரக்கன்றுகள் நடும் செயலை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இன்று 25.4.2022 ஆம் தேதி ஆயுதப்படை பயிற்சி மைதான வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கடலூர் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 223 பயிற்சி காவலர்கள் 9 பிரிவுகளாக பயிற்சி பெற்று வருகிறார்கள்.ஒவ்வொரு பிரிவு பயிற்சி காவலர்கள் பயன்தரக் கூடிய மா, பலா, கொய்யா, நாவல் போன்ற 5 வகை மரக்கன்றுகள் வீதம் 45 மரக்கன்றுகளை நட்டனர். நன்றாக பராமரிக்கும் பயிற்சி பிரிவுக்கு பயிற்சி நிறைவு நாளில் பரிசு வழங்கப்படும் என ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், காவல் ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜயகுமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் எழில்தாசன், உதவி ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், ராஜேந்திரன், திருமதி. வள்ளி,ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார், முருகன் மற்றும் பயிற்சி காவலர்கள் பங்கேற்றனர்.


No comments:
Post a Comment