கீரப்பாளையம் அருகே அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதார ஜோதி பண்பாட்டு கலை குழுவினருடன் இணைந்து பள்ளி கல்வி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

கீரப்பாளையம் அருகே அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதார ஜோதி பண்பாட்டு கலை குழுவினருடன் இணைந்து பள்ளி கல்வி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

கீரப்பாளையம் அருகே      அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதார ஜோதி பண்பாட்டு கலை குழுவினருடன் இணைந்து பள்ளி கல்வி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது!!!


கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட சுகாதார ஜோதி பண்பாட்டு கலை குழுவினருடன் இணைந்து பள்ளிக் கல்வி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது .


இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் பா. ரீட்டா அவர்கள்  தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செல்வி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சா.சுதா காந்த் ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழுவின் தலைவி ஆ.அருள்மொழி அவர்கள் கலந்துகொண்டு மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை அவர்களின் பணி குறித்து  தெளிவாக விளக்கி கிராமிய பாடல்கள்  நாடகங்கள் வாயிலாக     கலை நிகழ்ச்சியை சுகாதார ஜோதி பண்பாட்டு கலைக்குழுவினர் மூலம் நடத்தப்பட்டது.


பின்பு மேலாண்மைக் குழு 20 பேர் கொண்ட  உறுப்பினர்களை தேர்வு செய்து தலைவராக மு .ஆனந்தி துணைத்தலைவர் ம.சித்ரா  ஆகியோர்களை தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  கிராம பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:

Post a Comment

*/