வேப்பூரில் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கமாகும் அதன்படி கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
தினசரி அம்மன் வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதை தொடர்ந்து, ஏப்ரல் 26 ந் தேதி காலை செவ்வாடை அணிந்த பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர், மாலை 5:00 மணியளவில் ஶ்ரீ முத்துமாரியம்மன் திருத்தேர் வீதியுலா தொடங்கியது அதனை கிராம மக்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.
இதில் சுற்றுப்புற கிராம மக்கள்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

No comments:
Post a Comment