ஸ்ரீமுஷ்ணம் அருகே 17 வயது பெண்ணை கடத்திய வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

ஸ்ரீமுஷ்ணம் அருகே 17 வயது பெண்ணை கடத்திய வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

 

ஸ்ரீமுஷ்ணம் அருகே 17 வயது பெண்ணை கடத்திய வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் அதிரடி நடவடிக்கை.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட குணம் மங்கலத்தைச் சேர்ந்த குமார் மகள் ரேணுகா 17 பெயர் மாற்றப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு ரேணுகாவை காணவில்லை என குமார் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மகன் ஸ்ரீநாத் வயது 19 சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை உதவி ஆய்வாளர் சுபிக்ஷா விசாரணைக்காக ஸ்ரீ நெடுஞ்சேரி சென்றுகொண்டிருந்தபோது ஸ்ரீநாத் ரேணுகா இருவரும் நாச்சியார் பேட்டை பஸ் நிறுத்தத்தில் பேருந்து காக காத்துக் கொண்டிருந்த போது போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பேசியதால் சந்தேகம் அடைந்த குமார் கொடுத்த புகார் மனு பார்த்தபோது ரேணுகா என்பதும் தெரியவந்தது பின்னர் விசாரணையில் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல இருப்பதால் திருமணம் செய்துகொண்டு வேலைக்கு செல்வதாக கூறியபோது ரேணுகா விற்கு 17 வயது என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத் தை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் பின்னர் ரேணுகாவை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது 


செய்தியாளர்; கே, பாலமுருகன்

No comments:

Post a Comment

*/