கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வேலை கேட்டு திருச்சியை நோக்கி சைக்கிள் பிரச்சார பயணம்,
இந்த பயணக்குழுவானது சென்னையிலிருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாகவும் திருச்சி நோக்கி சென்றது. இதில் மாநில செயலாளரும், பயணக்குழுவின் தலைவருமான பாலா சிறப்புரை ஆற்றினார்.
இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தின் முக்கிய நோக்கமாக அரசுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடு, விருதாசலம், திட்டக்குடி,தொழுதூர், அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்பிடு, சித்தூர் ஆரூரான் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலைகளை திறந்து இளைஞர்களுக்கு வேலை வழங்கிட கேட்டு மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் தலைமையில் சைக்கிள் பிரச்சார பயணம் நடைபெற்றது.

No comments:
Post a Comment