குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெய்வேலி மகளிர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெய்வேலி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் k.விஷ்ணுபிரியா அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்நிகழ்வில் மாணவிகளுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் காவலன் செயலி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நெய்வேலி மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் M.பேபி குறிஞ்சிப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்

No comments:
Post a Comment