கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூர் ஊராட்சியில் ராயர்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர் இதில் அந்த கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து குடிநீர் குழாய்கள் சரிசெய்யாமல் உள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .மேலும் சாலை பணி நடைபெறாததால் இப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்லவும் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ராயர்பாளையம் கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பேருந்து நிறுத்தம் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் ஜாபர்.K

No comments:
Post a Comment