தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி (மற்றும்) வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை மையப்படுத்தி போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினோம்.
இந்நிகழ்விற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமை தாங்கினார்.கட்சியின் மாநில பொருளாளர் பாண்டுரங்கன் மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.இந்நிகழ்வில் பல்வேறு கிராமங்கள் கிளைச் செயலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; சாகுல் ஹமீது

No comments:
Post a Comment